அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

“கிராம சக்தி” உடனடி லொத்தர் சீட்டினை சனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் சந்தைக்கும் விநியோகம் செய்யப்பட்டது.

30-January-2019

கிராம சக்தி மக்கள் இயக்கத்தின் கீழ் அபிவிருத்தி லொத்தர் சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கிராம சக்தி உடனடி லொத்தர் சீட்டினை நேற்றைய தினம் அதாவது (2019.01.29) ஆந் திகதியன்று அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் திரு. சேன சூரியப்பெரும அவர்களின் கரங்களால் சனாதிபதி கௌரவ மைத்திரி சிறிசேன அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அநேகமான சந்தர்ப்பங்களில் அபிவிருத்தி லொத்தர் சபை அரசின் அபிவிருத்திச் செயற்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறான உடனடி லொத்தர் சீட்டுக்களை சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளதுடன் நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள்  தொடர்பான தெளிவினை பொது மக்களுக்கு அறியப்படுத்துவதும் அதன் நோக்கமாக அமைந்துள்ளது.

இதற்கு முன்னரான சந்தர்ப்பங்களின் போதும் அபிவிருத்தி லொத்தர் சபையினால் 2018 ஆம் ஆண்டில் என்டர்பிரைசஸ் ஶ்ரீ லங்கா எனும் நிகழ்ச்சித்திட்டத்துக்கு இணையாக  V2025 கமட சவிய மற்றும் கமட தினும எனும் பெயர்களில் உடனடி லொத்தர் சீட்டுக்கள் இரண்டினை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் கிராம சக்தி இயக்கத்துடன் தொடர்புடைய பல்வேறுபட்ட செயற்திட்டங்களுக்கான லொத்தர் சீட்டுக்களை சந்தைக்கு அறிமுகஞ் செய்வதற்கு எதிர்பார்ப்பதாக அபிவிருத்தி லொத்தர் சபையினால் தெரிவிக்கப்பட்டது.


லொத்தர் சீட்டிலுப்பு நாட்களின் திருத்தங்களுடன் நியத ஜய லொத்தர் சீட்டு சந்தையிலிருந்தும் அகற்றப்பட்டது.

02-August-2019

லொத்தர் சீட்டிலுப்பு நாட்களின் திருத்தங்களுடன் நியத ஜய லொத்தர் சீட்டு சந்தையிலிருந்தும் அகற்றப்பட்டது.

வாரந்தம் சகல செவ்வாய் மற்றும்  வெள்ளிக் கிழமைகளில் சீட்டிலுக்கப்படும் நியத ஜய லொத்தர் சீட்டு 2019 ஜூலை மாதம் 30 ஆந் திகதியிலிருந்து வலுவிலிருக்கும் வகையில் சந்தையிலிருந்து அகற்றுவதற்கு அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் இறுதி வெற்றிக்கான சீட்டிலுப்பு 2019 ஜூலை மாதம் 30 ஆ...

சிறப்புக் கட்டுரைகள்