அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

“அத கோடிபதி” 12 ஆவது கோடிபதியுடன் மேலும் 39 அதிர்ஷ்டசாலிகளுக்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் பரிசு வழங்கி வைத்தல்.

14-February-2019

அபிவிருத்தி லொத்தர் சபையின் “அத கோடிபதி” லொத்தர் சீட்டின் மூலம் அதிர்ஷ்டசாலியாக மாறிய 12 ஆவது கோடிபதியுடன் மேலும் 39 வெற்றியாளர்களுக்கு உரித்துடைய காசோலைகள் மற்றும் பரிசுகளை வழங்கி வைக்கும் நிகழ்வு 2019.02.12 ஆந் திகதியன்று அபிவிருத்தி லொத்தர் சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அதன் போது “அத கோடிபதி” இன் 485 ஆவது வாரத்துக்குரிய ஜயமல்ல ரூபா. 50,341,310 ஆன தொகையை வெற்றியீட்டிய மீரிகமையைச் சேர்ந்த திரு. கே.எச்.கே.டீ. அபேவிக்கிரம அவர்களுக்குரிய காசோலை வழங்கி வைக்கப்பட்டது. அவ் வெற்றிக்குரிய லொத்தர் சீட்டினை விற்பனை செய்த பிபில மெதகம விற்பனை முகவரான திரு. ஏ.டீ. லலித் நிஹால் அவர்களுக்குரிய பணப் பரிசும் சான்றிதழும் வழங்கி வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

மேலும் தச  லக்ஷபதி 34 வெற்றியாளர்களுக்கான  காசோலைகள் மற்றும் மோட்டார் வாகனமொன்று, முச்சக்கர வண்டியொன்று மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்கள்களும் குறித்த வெற்றியாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இப் பரிசினை வழங்கி வைக்கும் வைபவத்திற்கு அபிவிருத்தி லொத்தர்   சபையின் தலைவர் திரு. சேன சூரியப்பெரும அவர்களுடன் அதன் செயற்பாட்டுப் பணிப்பாளர் திரு. எச்.ஆர். விமலசிரி அவர்கள் உள்ளிட்ட ஏனைய அலுவலர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

 


18-July-2019

...

அபிவிருத்தி லொத்தர் சபையின் விற்பனை உதவியாளருக்கு கௌரவ சனாதிபதியினால் ட்ரைசைக்கிள் வழங்கி வைக்கப்பட்டது.

08-July-2019

அபிவிருத்தி லொத்தர் சபையின் விற்பனை உதவியாளருக்கு கௌரவ சனாதிபதியினால் ட்ரைசைக்கிள் வழங்கி வைக்கப்பட்டது.

கௌரவ சனாதிபதியின் எண்ணக்கருவொன்றாக நடைமுறைப்படுத்தப்படும் “நாட்டிற்காக ஒன்றிணைவோம்” என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் மற்றுமொரு கட்டமாக கடந்த ஜூலை மாதம் 06 ஆந் திகதியன்று பிபில பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அந் நிகழ்வில் அபிவிருத்தி லொத்தர் சபையினால் நாட...

சிறப்புக் கட்டுரைகள்