அபிவிருத்தி லொத்தர் சபை

எங்களை பற்றி

பார்வை

"இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்திக்காக லொத்தர்கள் மூலம் வருமானத்தைச் சேகரிப்பதில் முதன்மைப் பங்காளராகவிருத்தல்"

மிஷன்

"தர மேம்பாடு என்பவற்றுக்கான பங்களிப்பை அதிகரிக்க லொத்தர்கள் மூலம் வருமான உற்பத்தியை விருத்திசெய்தல் பொருளாதாரம், சமூக அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்க்கைத்"

கலாச்சாரம்

நம்பகத்தன்மை - நாம் வழங்கும் லொத்தர்களும், எமது வர்த்தக நடவடிக்கைகளை நடத்தும் முறையும்   நியாயமானதாக,   நேர்மையானதாக, நம்பிக்கையாக இருத்தல்
நேர்மறையானபோக்கு  - லொத்தர்செயற்பாட்டைநடத்திச்செல்கையில், தாம்எதிர்கொள்ளும்அனைத்துசவால்களின்போதும்அ.லொ.சஊழியர்கள், நம்பிக்கையானஅணுகுமுறையையேகைக்கொள்வார்கள்
முடிவுகளைமையமாகக்கொண்டமை  - அ.லொ.ச. ஊழியர்கள்தமதுபணிகளில் நம்பிக்கையுள்ளவர்கள். அத்துடன் தமக்குவழங்கப்பட்டஇலக்குகளைச்சாதகமானமுறையில்எட்டுவதையே ஒரே நோக்கமாகக் கொண்டவர்கள்.
புத்தாக்கம் - அ.லொ.ச. ஊழியர்கள் வர்த்தக செயற்பாடுகளை முன்னேற்றுவதற்கான உபாயங்களைத் தேடுவதற்கும், சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப அவைதொடர்பான தீர்மானங்களை எடுத்து விரைவாகச் செயற்படுவதற்கும்  ஊக்குவிக்கப்படுகின்றனர்.
கூட்டுச் செயற்பாடு  - அ.லொ.ச. ஊழியர்கள் நிறுவக ரீதியான இலக்குகளை எட்டுவதற்கு திறந்த மனத்துடனும், பரஸ்பர கண்ணியத்துடனும் தனிப்பட்ட அபிவிருத்திக்காகவும் கூட்டாகப் பணியாற்றுகின்றனர்.
அதியுச்ச தர இலக்கு - அ.லொ.ச. ஊழியர்கள் தமது சேவையின் தரத்தை அதி உச்சத்தில் பேண தொடர்ந்தும் பாடுபடுகின்றனர்

அபிவிருத்தி லொத்தர் சபை

ஒளிமயமான வாழ்க்கையை நோக்கி அழைத்துச் செல்லும் அபிவிருத்தி லொத்தர் சபை இவ் வருடம் சனவரி மாதம் 19 ஆம் திகதிக்கு தனது 36 ஆவது ஆண்டு நிறைவினை கொண்டாடுகின்றது. இலங்கையர்களை முன்னிலைப்படுத்தி தனது உன்னத நோக்கங்களை அடையச்  செய்யும் வகையில் 1983 ஆம் ஆண்டு சனவரி மாதம் 19 ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி லொத்தர் சபை அன்று தொடக்கம் இன்றுவரை கடந்து வந்த 36 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தினுள் சந்தித்த மைற்கற்களைப் போன்றே அது உருவாக்கிய வெற்றியாளர்களுக்கும் எல்லையில்லை. இந் நாட்டு மக்கள் லொத்தர் சீட்டொன்றிற்காக செலவிடும் இருபது ரூபாவினை மீண்டும் அவர்களது கரங்களுக்கு கொண்டு சேர்க்கும் அபிவிருத்தி லொத்தர் சபை இந் நாட்டில் வாழும் அநேக மக்களின்  வாழ்வினை ஒரே இரவில் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தி நாட்டிற்கான சுகாதாரம் மற்றும் கல்வி ரீதியான பாரிய பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றது.

சனாதிபதி நிதியம் மற்றும் மகபொல நம்பிக்கை நிதியத்தின் மூலம் 2.2 மில்லியன் ரூபா வீதம் நிதி முதலீடு செய்து  இச் சபை ஆரம்பிக்கப்படுவது சனாதிபதி நிதியம் மற்றும் மகபொல நம்பிக்கை நிதியத்தின் நிதித் தளத்தினை வலுப்படுத்தும் முழுமையான அபிலாசையிலாகும். அதற்கிணங்க சனாதிபதி நிதியம் மற்றும் மகபொல நம்பிக்கை நிதியத்திற்காக தனது பங்கிலாபங்களை நன்கொடையாக வழங்கும் ஒரேயொரு அரச நிறுவனமாக அபிவிருத்தி லொத்தர் சபை விளங்குகின்றது.  அபிவிருத்தி லொத்தர் சபையின் ஆரம்ப கால கட்டங்களில் அபிவிருத்தி லொத்தர் மத்திய நிலையமாக அறிமுகப்படுத்தப்பட்டதுடன் அதற்குப் பின்னர் 1993 ஆம் ஆண்டுகளில் அபிவிருத்தி லொத்தர் அறக்கட்டளை என்று மாற்றப்பட்டது. 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆந் திகதியன்று 20 ஆம் இலக்க அபிவிருத்தி லொத்தர் சபைச் சட்டத்தின் மூலம் இவ் அறக்கட்டளை அபிவிருத்தி லொத்தர் சபை என பெயர் மாற்றம் பெற்றது.  

1983 ஆம் ஆண்டு உடனடி லொத்தர் சீட்டுக்களை அறிமுகப்படுத்திய அபிவிருத்தி லொத்தர் சபை லொத்தர் சீட்டுக்களை சந்தைப்படுத்தி விற்பனையின் நிமித்தம் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் 1987 ஆம் ஆண்டு “சனிக்கிழமை அதிர்ஷ்டம்” என்ற லொத்தர் சீட்டினை அறிமுகப்படுத்தியதன் ஊடாக லொத்தர் சீட்டுக்கள் சந்தையிலும் தொலைக்காட்சியில் (தேசிய ரூபவாஹினி) லொத்தர் சீட்டிலுப்பினையும் அறிமுகஞ் செய்த முதன்மை லொத்தர் சீட்டு வர்த்தகமாக மாறியது. ஆரம்பத்தில் சனிக்கிழமை அதிர்ஷ்டச் சீட்டிலுப்பில் சனிக்கிழமைகளில் மாத்திரம் நடாத்தப்பட்டதோடு அதன் பின்னர் புதன் மற்றும் திங்கள் ஆகிய தினங்களிலும் நடைபெற்றது.

“அதிர்ஷ்டச் சக்கரம்” இன் மூலம் தேசிய ரூபவாஹினித் தொலைக்காட்சியில் சீட்டிலுப்பு நிகழ்ச்சிகள் 1998 ஆம் ஆண்டு சனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டதோடு, அது ஒவ்வொரு வாரமும் நடாத்தப்பட்டு வருகின்றது. பரிசில்களை வென்றெடுக்காத உடனடி லொத்தர் சீட்டிலுப்புக்களுக்காக இரண்டாம் முறை சீட்டிலுப்பினை மேற்கொண்டு மக்களுக்கு பரிசில்களை வழங்கும் நிகழ்வும் இதன் மூலம் மேற்கொள்ளப்படுவதோடு இது அப்போது காணப்பட்ட வரவேற்புள்ள பிரபலமான நிகழ்ச்சித் தொகுப்பாகவும் விளங்கியது.

இரண்டாவது “ அபிவிருத்தி அதிர்ஷ்டம்” லொத்தர் சீட்டினை ( தற்போது லக்கின அதிர்ஷ்டமாக அவ் லொத்தர் சீட்டு அறிமுகப்படுத்தப்படுகின்றது) சந்தைக்கு விற்பனையின் பொருட்டு அறிமுகப்படுத்தி இரண்டாவதாக தேசிய ரூபவாஹினியின் மூலம் சீட்டிலுப்பு நிகழ்ச்சி 1998 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 09 ஆந் திகதியன்று இடம்பெற்றது. செவ்வாய்க் கிழமை மற்றும் வெள்ளிக் கிழமை நாட்களிலும் இச் சீட்டிலுப்பு நடைபெற்றதுடன் வெற்றியாளர்களை கண்டறிந்து கொள்வதற்காக இலக்கத்துடன், லக்கின குறியீட்டினையும் அறிமுகப்படுத்தியதானது இவ் லொத்தர் சீட்டின் விசேட இயல்பாகும். அதன் பிரபல்யத் தன்மையின் காரணமாக அச் சீட்டிலுப்பு புதன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் பரந்து பட்ட அளவில் மேற்கொள்ளப்படுகின்றது.

மூன்றாவதாக திங்கள் மற்றும் வியாழக் கிழமை ஆகிய தினங்களில் சீட்டிலுக்கப்பட்ட “ஜயோதா” லொத்தர் சீட்டு 2004 ஆம் ஆண்டு சனவரி மாதம் 26 ஆந் திகதியன்று அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று அதிக வரவேற்பினைப் பெற்றுள்ள ஜயோதா லொத்தர் சீட்டு 2018 ஆம் ஆண்டு தொடக்கம்  அதன் ஆரம்ப ஜயமல்லத் தொகை இரண்டு (02) கோடி வரை அதிகரிக்கச் செய்து புதிய தோற்றத்தில் சந்தைக்கு விற்பனைக்காக வெளியிடப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆந் திகதியன்று அபிவிருத்தி லொத்தர் சபை அதன் மற்றொரு  வெற்றிக் கோபுரத்தை எட்டியுள்ளது. அது ரூபா 10 மில்லியனைக் கொண்ட சுப்பிரி பரிசுடன் கூடிய “நியத ஜய” லொத்தர் சீட்டினை சந்தைக்கு அறிமுகப்படுத்தியன் பின்னராகும். தற்போது செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வெற்றிக்கான சீட்டிலுப்புக்கள் நடைபெற்று வருகின்றன.

2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் லொத்தர் சீட்டுக்கள் சந்தையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளதோடு அப்போது காணப்பட்ட லொத்தர் சீட்டு விற்பனைச் சந்தையில் மாபெரும் ஜயமல்லவான 7 கோடி 50 இலட்சம் பெறுமதியான பரிசினை பெற்றுக்கொடுத்து “கோடிபதி சனிதா” சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டதோடு அது தற்போது அபிவிருத்தி  லொத்தர் சபையின் மிகப் பிரசித்திபெற்ற லொத்தர் சீட்டாகவும் மக்களிடத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அத்துடன் தனது பயணத்தை நிறுத்திக்கொள்ளாது முன் சென்ற அபிவிருத்தி லொத்தர் சபையானது சந்தையில் குறிப்பிடத்தக்க புரட்சியை ஏற்படுத்தி 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதற் தடவையாக நாள்தோரும் சீட்டிலுக்கப்படும் லொத்தர் சீட்டாகவும்,  05 கோடியைத் தாண்டிய மாபெரும் ஜயமல்லவுடனும் “அத கோடிபதி” லொத்தர் சீட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றுவரை  13 கோடீஸ்வரர்களை உருவாக்குவதற்கு முனைந்துள்ள அத கோடிபதி சமகாலத்தில் மக்களின் நன்மதிப்பை வென்ற கவர்ச்சிகரமான லொத்தர் சீட்டாகவும் விளங்குகின்றது.

காலத்துக்கேற்ற வகையில் அபிவிருத்தி லொத்தர் குடும்பத்துடன் இணைந்து கொண்ட தச லக்‌ஷபதி, கலெக்ஸி ஸ்டார், அபிவிருத்தி அதிர்ஷ்டம் ஆகிய சீட்டிலுப்பு லொத்தர் சீட்டுக்களும் அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர் சீட்டுக்களாக வெளிவந்ததுடன், தற்போது அவ் லொத்தர் சீட்டுக்கள் மூன்றும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கட்டம் கட்டமாக முன்னேற்றப் பாதையினை நோக்கிப் பயணித்து  தற்காலத்தில் வெற்றிகமரமான மைற்கற்களை கடந்து வந்த அபிவிருத்தி லொத்தர் சபையானது காலத்துக்கு ஏற்றவாறு சமூக, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப போக்குகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட லொத்தர் சீட்டுக்களைக் கொண்டுள்ளது. ஆரம்பம் முதல் லொத்தர் சீட்டுக்களை அச்சிடுவதற்காகவும், பொது மக்களுக்கு வழங்கப்படும்  பணப் பரிசுகளை வழங்குவதற்கும் அபிவிருத்தி லொத்தர் சபை நவீன தொழில்நுட்பத்தினையே பயன்படுத்துகின்றது. தற்போது தொழில்நுட்பத்துடன் ஒன்றிணைந்து சர்வதேச லொத்தர் வர்த்தகத்தின் முன்னோடிகளைப் பின்பற்றி மேலும் லொத்தர் வர்த்தகத்தின் புதிய பரிமாணங்களை நோக்கிப் பயணிப்பதற்கு எதிர்பார்க்கும் அபிவிருத்தி லொத்தர் சபையானது அதற்காக ஏற்கனவே அடித்தாளத்தினை இட்டுள்ளது.

தொலைபேசி மூலமாக லொத்தர் சீட்டிலுப்பின் பெறுபேறுகளை அறிந்து கொள்வதற்கு தானியங்கு குரல் இணைப்புச் சேவை (IVR) மற்றும் லொத்தர் சீட்டிலுப்பின் பெறுபேற்றுடன் கூடிய SMS குறுஞ் செய்தியினை தொலைபேசிக்கு கொண்டு சேர்க்கும் வசதியினையும் மக்களுக்கு வழங்குவது அம் முயற்சியின் விளைவுகளில் ஒன்றாகும்.  

இவ் அனைத்து அபிவிருத்திகளுடனும் முன்னோக்கிச் செல்லும் அபிவிருத்தி லொத்தர் சபையானது தனது முக்கிய குறிக்கோளாகக் கொண்டுள்ள சனாபதி நிதியத்துக்கும் மகபொல நம்பிக்கை நிதியத்துக்கும் நிதியியல் பங்களிப்பு வழங்குவதனை எதுவித தங்கு தடையுமின்றி தொடர்ச்சியாக நிறைவேற்றி வருவதாகும்.  அதன் போது 1983 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியினுள் சனாதிபதி நிதியத்திற்காக  அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட அபரிமிதமான பங்களிப்பினால் ரூபா. 2,132,089,178  ஆன தொகை கிடைக்கப்பெற்றது. அதன் ஆரம்பம் முதல் இதுவரை பல்கலைக்கழக மாணவ மாணவிகளின் உயர் கல்வி நடவடிக்கைக்காக வழங்கிய மகபொல புலமைப் பரிசிலின் அளவு 289137 இனையும் தாண்டியுள்ளது. கோடிக்கணக்கில் கணக்கிட்டு அளவிட முடியாத அளவுக்கு பெருந்தகை மனிதப் பண்புகளினால் இலங்கை வாழ் மக்களுக்கு மகத்தான பங்களிப்பினை வழங்கும் அபிவிருத்தி லொத்தர் சபை அற்ப இருபது ரூபாவினால் மேற்கொள்ளும் தேசியப் பணியானது மெச்சத்தக்கதாகும்.

இப் பெருந்தன்மையான பங்களிப்புக்கு மேலதிகமாக அபிவிருத்தி லொத்தர் விற்பனை வலையமைப்புடன் கைகோர்த்து நின்று விநியோகஸ்த விற்பனை முகவர்கள் 88 பேரும், 2500 க்கும்  மேற்பட்ட விற்பனை முகவர்களுக்கும் அவர்களுக்குக் கீழ் தொழில்புரியும் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனை உதவியாளர்களுக்கும் தொழில் வாய்ப்புக்களை வழங்கிய தோற்றுவாயாகவும் அபிவிருத்தி லொத்தர் சபை விளங்குகின்றது. அவர்கள் அனைவரிலும் தங்கி வாழும் இலட்சத்துக்கும் அதிகமானோர் தற்பெருமையுடன் தங்கள் வாழ்க்கை ஓட்டத்தினை கொண்டு செல்வது அபிவிருத்தி லொத்தர் சபையின் உறுதுணையுடனாகும். நிறுவன ரீதியாக கடமையில் ஈடுபடும் முன்னூறுக்கும் மேற்பட்டவர்களுக்கும் வாழ்வாதாரத்  தொழிலினை ஏற்படுத்திக்  கொடுத்த அபிவிருத்தி லொத்தர் சபை லொத்தர் சீட்டுக்களைக் கொள்வனவு செய்பவர்களைப் போன்றே ஊழியர்களது வாழ்க்கையினையும் அதிர்ஷ்டமாக்குகின்றது. விசேடமாக வேறு நிறுவனங்களினால் தொழில்வாய்ப்புக்களை வழங்காத உடலியல் ரீதியான குறைபாடுடையவர்கள் கிட்டத்தட்ட 550 பேருக்கு தொழில் வழங்கியுள்ளதோடு, அவர்கள் மற்ற நபர்களிடம் கையேந்தும் நிலையில் இருந்து சுயமாக வாழ்வதற்குரிய ஊக்கத்தினை வழங்கிய அபிவிருத்தி லொத்தர் சபை அநேகமான ஜீவன்கள்  இன்றைய நாள் கண்ணீருக்கு மத்தியிலும் சிரித்து வாழ்கின்றார்கள்.

இம் முக்கிய நடப்பிலுள்ள தேசியப் பங்களிப்புக்கு மேலதிகமாக உள்நாட்டு இறைவரியினைச் செலுத்துதல் மற்றும் இந் நாட்டில் பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல்வேறுபட்ட மத ரீதியான, கல்வி சார்ந்த, சமூக,  கலாச்சார நிகழ்ச்சித்திட்டங்களுக்காகவும் அபிவிருத்தி லொத்தர் சபை தனது நட்பு ரீதியிலான பங்களிப்பினை வழங்கி வருகின்றது.

அபிவிருத்தி  அடைந்து வரும் இலங்கை நாடு, அபிவிருத்தியடைந்த  தேசமொன்றினை நோக்கிய எதிர்பார்கையுடன் அரச நிறுவனமாக வழங்க முடியுமான அதிகபட்ச பங்களிப்பினை வழங்கும் அபிவிருத்தி லொத்தர் சபை பூமிக்குப் பாரமில்லாத நபர்களை உருவாக்குகின்றது. இந் நாட்டில் நிலவும் மனித மற்றும் பௌதீக வளங்களைப் பயன்படுத்தி  தேசிய பொருளாதார சமூக விருத்தி மற்றும் கலாச்சார முன்னேற்றங்களை ஏற்படுத்தும் அபிவிருத்தி லொத்தர் சபையானது பணத்தினை விட மனித நேயத்துக்கு முன்னுரிமை வழங்கும் நிறுவனமாகவும் திகழ்கின்றது.