அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

உமது வாழ்க்கையை வெல்லும் எமது முன்னோடிகள்

10-July-2019

அவர் ஏழு வயதிலே  தென்னங் கீற்றில்  வெற்றிலை பாக்கினை செறுகிக் கொண்டு விற்பனை செய்தவன் இன்று எந்த இடத்தில் கால் பதித்துள்ளார் என்பதனை உம்மால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? இன்று நாம் உங்களுக்கு கூறும் இந்த வாழ்க்கைச் சரிதை அபிவிருத்தி லொத்தர் சபையின் சக்தியால், தனது தலையெழுத்தை அதிர்ஷ்டத்தின் பக்கம் மாற்றியமைத்துக் கொண்ட எமது காலத்துக்குரிய  தொழில்முனைவர் ஒருவரைப் பற்றியாகும்.

தனது வாழ்க்கையில் எண்ணையும் எழுத்தையும் கற்றுக்கொள்ள  பாடசாலை செல்ல வேண்டிய வயதில்  வெற்றிலைப் பாக்கு விற்ற அந்த சிறிய பையன் இன்று அவருடைய வயது எழுபத்தியிரண்டு ஆனால் அவர் முதுமையின்  ரேகைகள் முகத்தில் தெரிந்தாலும் உறுதியும் உடற்பலம் கொண்ட மனிதராக திகழ்கின்றார். ஆனால் இன்று அவர் வெற்றிலைப் பாக்கு விற்பனை செய்யும் மனிதரல்ல. இலங்கையில் அதிகளவு லொத்தர் சீட்டுக்களை விற்பனை செய்யும்  கோடிபதி வர்த்தகர்களுள் ஒருவராவார். அபிவிருத்தி லொத்தர் சபையின் சந்தைப்படுத்தல் பணிக்கு பாரிய பங்களிப்புக்களை வழங்கிய கண்டி மாவட்டத்தின் திகன எனும் ஊரில் வசிப்பவர் என்ற பெயரைக் கூறியதுடன் அனைவரும்  அறிந்து வைத்துள்ள அவர் அலடின் பெரேரா ஆவார். நாங்கள் செவிமடுத்துள்ள சுல்ல செட்டி ஜாதகத்தில் வரும்  இறந்த எலியை விற்று மிகப் பெரிய செல்வந்த வணிகராக மாறிய மகாபெருமானின் கதையை மீண்டும் ஞாபகப்படுத்திய அலடின் பெரேரா, அவரின் வாழ்க்கைச் சரிதையைக் கொண்டு அனைவருக்கும் இலட்சியப் புருஷராக விளங்குகின்றார்.   அபிவிருத்தி லொத்தர் சபை அலடின் பெரேராவை கோடிபதியாக்கியது  லொத்தர் சீட்டிலுப்பினால் அன்று மற்றவர்களை வெற்றியளிக்கச் செய்யும் விற்பனை முகவராக விளங்கும் பதவியின் மூலமாகும். லொத்தர் வர்த்தகம் என்பது அலடின் போன்ற பெட்டிக் கடைக்காரர் ஒருவரை கோடிபதியாக மாற்றிய திருப்புமுனையில் ஒன்றாகும்.

வெற்றிலைப் பாக்கினை விற்று வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்த அலடின் பெரேரா ஒரு இரவில் தனது வாழ்க்கையின் விதியை மாற்றிக் கொண்டவரல்ல, பலதரப்பட்ட சவால்களுக்கு மத்தியில் வாழ்க்கையை பாலைவனத்தில்  சோலையைத் தேடி  பொடி நடையாக சென்றவராவார். ஒவ்வொரு இடமாகச் சென்று வெற்றிலைப் பாக்கு விற்று, பின்னர் சிறியதொரு பெட்டிக் கடையினை ஆரம்பித்த அலடினுக்கு எதிர்பாராத விதமாக செய்யிது அலீயிடமிருந்து ஐந்து லொத்தர் சீட்டுக்கள் கிடைக்கப்பெற்றது. அலடினின் கைகளுக்கு முதற் தடவையாக அதிர்ஷ்டத்தின் வாயில் இவ்வாறே திறக்கப்படுகின்றது.  செய்யிது அலிக்கு விற்பனை செய்து கொள்ள முடியாது எஞ்சியிருக்கும் லொத்தர் சீட்டுக்களை தனது பெட்டிக் கடையில் வைத்து விற்பனை செய்வதனை அலடின் தனது வழக்கமாக்கிக்  கொண்டது  லொத்தரினால் சதம் சதமாக சேமித்து வைத்துக் கொள்ளும் இயலுமை இருக்கின்றது என்ற நம்பிக்கையிலாகும். பின்னர்  செய்யிது அலியின் லொத்தர் முகவர் நிலையை நடாத்திச் செல்வதற்கு அலடினுக்கு ஒப்படைக்கப்பட்டதோடு அலடின் லொத்தர் வியாபாரத்தின் சுமையை தனது தோலில் ஆரம்பிப்பது அவ்விடத்திலிருந்தாகும்.

வாரத்துக்கு இரு முறை கொழும்புக்குச் சென்று லொத்தர் சீட்டுக்களை கொண்டு வந்து விற்பனை செய்ய ஆரம்பித்த அலடின் பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் லொத்தர் விற்பனையை அதிகரிப்பதற்குரிய முயற்சிகளை  மேற்கொண்டார். லொத்தர் சீட்டுக்களை விற்பனை செய்வதற்கு விளம்பரப்படுத்தும் வாகனங்களோ அல்லது ஒலி பொருக்கிச் சாதனங்களோ அற்ற அக் காலத்தில் சைக்கிளில் ஏறி வாயால் கூவி பிரச்சாரங்கள் செய்து  ஒரு நாளைக்கு 45 மைல்கள் அளவுக்கு பயணித்துள்ளார். வாயில் இரத்த வாடை அடிக்கும் வரை தொண்டை கிழிய கூவி தனது லொத்தர் சீட்டு விற்பனையை அதிகரித்துக் கொள்வதற்குரிய நடவடிக்கை எடுத்த அலடினுக்கு மீண்டும் வாழ்வு சவால் விடுப்பது அவர் எதிர்பாராத வகையிலாகும். லொத்தர் வியாபாரத்தினைப் போன்றே அவர்  செய்து கொண்டு வந்த பழங்கள் விற்பனை செய்வதனை நிறுத்த ஏற்படுவது நகர சபையினால் அப் பெட்டி கடையை அகற்றியதன் பின்னரேயாகும்.

துன்பங்களால் அவதியுற்ற, அலடினுக்கு சவால்கள் என்பது புதியதொரு விடயமொன்றல்ல, மீண்டும் ஆங்காங்கே சென்று பழங்களை விற்பனை செய்யத் துவங்கினார். என்றாலும் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அலடின் தான் வாழிடத்தை கைவிட்டு ரஜவெல்லைக்கு​ வருகை தரும் அலடின் மீண்டும் சிறியதொரு கடையை திறக்கின்றார்.  என்றாலும் அதுவும் வெற்றியளிக்காத சந்தர்ப்பத்தில் திகன நகரத்தில் மரக்கறி கடையொன்றினை தொடங்கிய அலடினுக்கு திரும்பவும் அதிர்ஷ்ட தேவதை கதவு தட்டியதைப் போன்று உண்மையாகவே சனிக்கிழமை அதிர்ஷ்ட லொத்தர் சீட்டுக்கள் 20 தனது கரங்களுக்கு கிடைக்கப்பெற்றது. தனக்கு உரித்துடைய தொழிலாக அமைவது லொத்தர் சீட்டு வியாபாரம் என சுட்டிக்காட்டுவது போன்று அந் நிகழ்வை உணர்ந்தார்.  அனைத்தும் முயற்சிகளும் தோல்வியில் முடிந்தாலும் லொத்தர் வியாபாரத்தில் தோல்வியுறாத அலடின் அபிவிருத்தி லொத்தர் சபையின் சனிக்கிழமை அதிர்ஷ்டத்தினைக் கொண்டு ஆரம்பித்த லொத்தர் சீட்டு வியாபாரம் நாளுக்கு நாள் முன்னேற்றப் பாதையில் பயணிக்கத் தொடங்கியது. அவர் 1989 ஆம் ஆண்டு முதற் தடவையாக அவரின் பெயரிலே முகவர் நிலையை பெற்றுக் கொள்வதானது அபிவிருத்தி லொத்தர் சபையின் மூலமாகும்.

இறுதியாக இலங்கையின் அதிகளவு வெற்றியாளர்களை உருவாக்கிய விற்பனை முகவர்களுக்கிடையிலும் இலங்கையில் அதிகளவு விற்பனையை மேற்கொண்ட விற்பனை முகவராகவும் சரித்திரம் படைக்கும் அலடின் பெரேரா அவர்கள் அத கோடிபதி லொத்தர் சீட்டு வியாபாரியாக திகழ்கின்றார்.  எவ்வளவு தடைகள் வந்தாலும் துன்ப துயரங்கள் ஏற்பட்டாலும் அதே போன்று மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் உறுதியாகவும், மனித நேயத்துடனும் நடவடிக்கைகளை மேற்கொண்ட அலடின் பெரேரா அவர்கள் விற்பனை உதவியாளர்கள் 143 பேருக்கு தந்தை போல் நின்று வழிகாட்டும் நட்புறவுடன் கூடிய வர்த்தகராக திகழ்ந்தார்.

அபிவிருத்தி லொத்தர் சபையில் அதிகளவு விற்பனையை மேற்கொண்டு அன்றும் இன்றுமாக அழியா நாமத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும் அலடின் பெரேரா அவர்களுக்கு அபிவிருத்தி  லொத்தர் சபை தனது இதயங் கனிந்த வாழ்த்துக்களை தெரிவிப்பது இவ்வகையிலாகும். 



02-November-2021

...

11-August-2021

...

11-August-2021

...

சிறப்புச் செய்தி