அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

உமது வாழ்வை வென்றெடுக்கும் எமது முன்னோடிகள் ..

05-December-2019

வாழ்க்கை என்பது குறித்ததோர் வரையறையினுள் நின்று கட்டியெழுப்பப்படவேண்டியதொரு விடயமல்ல.

பெரும்பாலானவர்கள் தாங்கள் ஆண் / பெண் என்ற பால் நிலை  அதுவில்லை எனின் சமூக அந்தஸ்தின் அறிவு மட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் பாரம்பரிய தேர்ந்தெடுப்புக்களைச் செய்யப் பழகியிருந்தாலும், அதனைத் தாண்டி ஒரு எட்டினை எடுத்து  வைக்க முடியுமாக இருந்தால் சாதாரண அரச  ஊழியர் அல்லது பாரம்பரியமாக சம்பளம் பெறும் ஒருவரை விட மூன்று முதல் நான்கு மடங்கினை விட அதிகமாக சம்பாதிக்கும் வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறுவதற்கான உம்மால் முடியுமாக இருக்கும்.

பெண்களினால் வெற்றியின்  சிகரத்தை  அடைய முடியாது  என அனுமானிக்கப்படும் ஒரு சிலரினால்,  லொத்தர் வியாபாரத்தில் அபிவிருத்தி லொத்தர் சபையுடன் ஒன்றிணைந்து முன்மாதிரி மிக்க பெண்ணாக  வெற்றியை உயர் மட்டத்திற்கே  கொண்டு  சென்ற  கண்டி மாவட்ட  விநியோகஸ்த  விற்பனை முகவரான  திருமதி ஜயவர்தன அவர்கள் எட்டு வருடங்கள் பூராக தொடர்ச்சியாக இலங்கையில் அதிகூடிய விற்பனைளை செய்துள்ள  தொழில்முனைவராக திகழ்கின்றார்.

கணக்கியலில் சிறப்புப் பட்டத்தைக் கொண்டவரான லொத்தர் வர்த்தகத்துடன் இணைந்துள்ள காலி விற்பனை முகவரான  திரு. அமில தியுண அவர்கள்   தனது சக பட்டதாரிகளை விஞ்சி அவர்களின் சம்பளத்தை விட மூன்று மடங்கு மாதாந்த வருமானத்தை  ஈட்டும்  வெற்றிகரமான  தொழில்முனைவராக காணப்படுகின்றார்.

இதனால் நாம் விளங்கிக்  கொள்ள வேண்டியது யாதெனில்,  பிரச்சினை காணப்படுவது லொத்தர் வியாபாரத்தில்  அல்ல மாறாக அதனை நோக்கும் மனப்பாங்கிலே காணப்படுகின்றது.

முதலில் எமது கவனம் இலங்கையில் அதிஉயர் விற்பனையை மேற்கொள்ளும் திருமதி ஜயவர்தன அவர்களின் பக்கம் திரும்புகின்றது. 

லொத்தர் வியாபாரத்துடன் இணைந்து 25 வருடங்களாகின்றன.

லொத்தர் வியாபாரத்துடன் இணைந்து இத்துடன் 25 வருடங்கள் நிறைவடைகின்றன. ஆனபடியால் அவரின் ஆரம்ப கால காட்டங்களில் அதனுடன்  இணைவது விற்பனை முகவர் என்ற பதவியின் மூலமாகும். அத்தோடு அக் காலங்களில் தனது அன்புக்குரிய கணவரே இந்த லொத்தர் வியாபாரத்தை மேற்கொண்டார்  என்பதனையும் அவர் கூறி நின்றார்.

தற்போது நான் அனைவருக்கும் தலைமைத்துவம் வழங்குவதை மாத்திரமே செய்கின்றேன்.

சிறிது சிறிதாக முயற்சி செய்து முன்னேற்றிய இந்த வியாபாரம் தற்போது உறுதியான நிலைக்கு மாறியுள்ளதாகவும், தற்சமயம் நான் வியாபாரத்தை மேற்பார்வை செய்வதனை மாத்திரமே செய்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார். 

பெண்ணாக இருப்பது வியாபாரத்துக்கு தடையாக இருக்கவில்லை.

பெண்ணாக இருப்பது அல்லது தனியான  தாயாக இருந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது எந்தவித முட்டுக்கட்டையாக அமையவில்லை எனவும், லொத்தர் வியாபாரம் என்பது நாட்டு மக்களுக்கு பயன்வாய்ந்த வியாபாரமாகவும் பெருமையுடன் ஆற்றக்கூடியதாகவும்  ஒரு பெண்ணினால் முடியுமான காரியம் என்றும் அவர் எடுத்துறைத்தார்.

கண்டியிலிருந்து நாட்டின் பல பாகங்களுக்கும் லொத்தர் சீட்டுக்கள் விநியோகிக்கப்படுகின்றன.

அவள் கண்டியிலிருந்து இலங்கையின் பல பிரதேசங்களுக்கும் லொத்தர் சீட்டுக்களை விற்பனை  செய்வதாகவும் நாட்டின் அதிகமான எண்ணிக்கையினர் அவளிடம் இருந்து லொத்தர் சீட்டுக்களை பெற்று விற்பனை  செய்வதாகவும் குறிப்பிட்டாள்.

எதிர்வரும் காலங்களிலும் அதிகூடிய அளவில் விற்பனை  செய்வதற்கு எதிர்பார்க்கின்றேன்.

கடந்த எட்டு வருட காலப்பகுதியைப் போன்றே எதிர்வரும் காலங்களிலும் இலங்கையில் அதிகூடிய விற்பனையை  மேற்கொண்டு அபிவிருத்தி  லொத்தர் சபையுடன் இணைந்து கைகோர்த்து  தொடர்ந்திருப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் கூறி அவள் தனது கருத்துறைக்கு  முற்றுப்புள்ளி வைத்தாள்.

அடுத்தபடியாக நாம் காலி மாவட்டத்து விற்பனை  முகவர் திரு. அமில தியுணவிடம் அவரது கருத்துக்களை வினவி நின்றோம்.

நான் கணக்கியலில் விசேட பட்டத்தைக் கொண்ட பட்டதாரியாவேன்.

நான் ஶ்ரீ ஐயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கணக்கியலில் விசேட பட்டத்தில் வகுப்புடன் கூடிய சித்தியினைப் பெற்றுக் கொண்ட அமில் தியுண அவர்கள் பாரம்பரிய பட்டதாரி என்ற மனோநிலையில் இருந்து விடுபட்டு லொத்தர் சீட்டு வியாபாரத்தில் தனது முழுக் கவனத்தையும் செலுத்தினார்.

அரச அல்லது தனியார்த் துறை சார்ந்த தொழிற் துறைகளில் நாம் மாதாந்த சம்பளத்தைப் பெறுவதற்கு கட்டுப்பட்டுள்ளோம்.

மூன்று வருடங்களாக தனியார்த் துறையில்  தொழிலாற்றிய அமில தியுண அவர்கள் ஒரே விடயப் பரப்பினுள் ஒரே மாதாந்த சம்பளத்தினுள் கட்டுப்பட்டு இருப்பதற்கு ஏற்பட்டுள்ளதனை உணர்ந்து கொள்கின்றார்.  அச் சந்தர்ப்பத்தில் அவரின் தெரிவாக அமைந்தது லொத்தர் சீட்டு வியாபாரமாகும். இன்று நிறைவேற்று தரத்தில் உயர் அதிகாரி  ஒருவர் பெற்றுக் கொள்ளும்  ஊதியத்தை விட மூன்று மடங்கு வருமானத்தை தான் மாதாந்தம் அடைந்து  கொள்வதாக அவர் கூறிநின்றார்.

லொத்தர் சீட்டு வியாபாரத்தை மிகச் சிறப்பாக மற்றுவதற்கு எனக்கோர் இலக்கு காணப்பட்டது.

தனது சிறு பராயம் முதல் தந்தையினால்  மேற்கொள்ளப்பட்டு வந்த லொத்தர் வியாபாரம் குறித்து எனக்கு அதீத விருப்பம் ஏற்பட்டிருந்தது, ஏனெனில் தான் கல்வி கற்றது, பல்கலைக்கழகத்துக்கு பிரவேசித்தது, அங்கு எனக்கு மகபொல புலமைப் பரிசில் கிடைக்கப் பெற்றது ஆகிய இவையனைத்தும் லொத்தர் வியாபாரத்தின் மூலமே நிகழ்ந்தது. எப்போதாவது அவ் வியாபாரத்துக்கு பெறுமானம் வழங்கி அதனை  சிறப்பாக முன்னெடுத்துச் செல்வது எனது எதிர்பார்ப்பாக இருந்தது எனவும் அது இன்றைய தினம் நிறைவேறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் முதற் தடவையாக அச்சிடப்பட்ட  உத்தியோகபூர்வ  பெறுபேறுகளை நாமே வெளியிடுகின்றோம்.

லொத்தர் வியாபாரத்தின் முக்கிய செயற்பாட்டுக் காரணியாக  அமைவது  உத்தியோகபூர்வ  பெறுபேறுகளுக்கு மிகஉயர்ந்த  பெறுமதி நிலவுவதாகவும் தான்  லொத்தர் வியாபாரத்துடன் இணைந்ததன் பின்னர் உத்தியோகபூர்வ பெறுபேற்றினை அச்சு ஊடகத்தின் மூலம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமில அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.  நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பாரம்பரியமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ள லொத்தர் சீட்டு விற்பனை முகவர்களின் வகிபாகத்தையும் தாண்டி தான் முன் சென்றுல்லதாகவும் அவர் தனது கருத்தில் எடுத்துறைத்தார்.

 

லொத்தர் சீட்டு விற்பனையாளர்களுக்கு சமூக அங்கீகாரம் அவசியப்படுகின்றது.

லொத்தர்  சீட்டு விற்பனை  என்பது வெறுமனே ஒரு சுய தொழில் வாய்ப்பு மாத்திரமன்று அதனையும் விஞ்சிய சமூக பெருமிதம் காணப்படுகின்றதாகவும் அப்  பெருமை லொத்தர் விற்பனையாளர்களுக்கு உரித்தாக வேண்டிய ஒன்று எனவும் கூறினார்.

லொத்தர் சீட்டு வியாபாரத்தை சுய தொழில் வாய்ப்பு என பார்க்கும் விதத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

லொத்தர் சீட்டு வியாபாரத்தை சுய தொழிலாக அன்று தொழிற்சாலையாக, வர்த்தகமாக கருதி அதனைப் பார்க்குமாறும், அதன் போது அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும், அதனூடாக அடைந்து  கொள்ள முடியுமான  வருமானம் எவ்வளவு என்ற பரந்த அறிவும் இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். பட்டமொன்றினைப்  பெற்றிருந்தும் லொத்தர் சீட்டு விற்பனை செய்வோரை குறைத்து மதிப்பிடும் மனப்பாங்கினை தகர்த்தெறிய தான் ஒரு சிறந்த உதாரணம் எனவும் கூறினார். அத்தோடு சந்தேகம், பயம் ஏதுமின்றி லொத்தர் சீட்டு வியாபாரத்துடன் கைகோர்த்து இணையுமாறு அவர் இளம் தலைமுறைக்கு அழைப்பு விடுத்தவராக தனது கருத்துத் தெரிவிப்பனை நிறுத்திக்  கொண்டார்.

அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னேற்றத்துக்கு அதிகமதிகம்  செயற்பட்டு எமக்கு பக்க பலமாக இருந்துள்ள இவர்கள் இருவருக்கும் இன்றும்  நேற்றும் நாளையும் அபிவிருத்தி லொத்தர் சபையின் அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமானவர்கள் என்பதனைக் கூற முடியும்.



30-March-2021

...

27-March-2021

...

சிறப்புச் செய்தி