அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

அபிவிருத்தி லொத்தர் சபையின் புதிய தலைவர் திரு.ஜகத் பி.விஜேவீர

12-February-2020

இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான ஓய்வு பெற்ற திரு.ஜகத் பி.விஜேவீர அவர்கள் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக கெளரவ நிதி அமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையில் அதிகாரியாக நியமனம் பெற்று தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய திரு.ஜகத் பி.விஜேவீர அவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலான பொது நிர்வாக துரையில் அனுபவம் பெற்றவர்.

தனது தொழில் வாழ்க்கை முழுவதும் பல்வேறு அமைச்சகங்களிலும் திணைக்களங்களிலும் பல பதவிகளை வகித்துள்ளதுடன் அரச பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

விசேடமாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றி அநுபவம் பெற்ற திரு.ஜகத் அவர்கள் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றியுள்ளார்.

அரச சேவையில் சிறந்த அநுபவம் பெற்ற திரு.ஜகத் பி.விஜேவீர அவர்கள் களணி பல்கலைக்கழகத்தில் நுண்கலை தொடர்பில் முதலாவது பட்டத்திணை பெற்று பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சர்வதேச கல்வி தொடர்பில் முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ளார்.

புதிய தலைவர் 2020.02.10ம் திகதி அபிவிருத்தி லொத்தர் சபையில் கடமையேற்றார்.சிறப்புச் செய்தி