அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

சூப்பர் வெற்றியாளர்கள் மூவருடன் மேலும் நாற்பத்தாறு வெற்றியாளர்கள் இத்தடவை அபிவிருத்தி லொத்தர் சபையினால் பரிசில்களை வென்றுள்ளார்கள்.

28-August-2019

அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர் சீட்டுக்களை மிக்க நம்பிக்கையுடன் கொள்வனவு செய்து அதிர்ஷ்டசாலிகளாக மாறிய நாற்பத்தொன்பது போருக்கான காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு 2019.08.20 ஆந் திகதியன்று அபிவிருத்தி லொத்தர் சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஒரு மாதத்தினுள் லக்கின அதிர்ஷ்டம் உருவாக்கிய சுப்பிரி வெற்றியாளர்கள் மூவருக்கான காசோலைகளை வழங்கி வைக்கும் நிகழ்வும் அங்கு இடம்பெற்றது. 

அதன் போது லக்கின அதிர்ஷ்டம் 2577 ஆம் வாரத்தின் சுப்பிரி ஜயமல்ல ரூபா. 3,744,332 ஆன தொகையை வெற்றியீட்டிய புவக்பிடியவைச் சேர்ந்த திரு. எஸ். ஆனந்த அவர்களுக்கும், லக்கின அதிர்ஷ்டம் 2562 ஆம் வாரத்தின் சுப்பிரி ஜயமல்லத் தொகையான ரூபா. 2,725,216 இனை வெற்றியீட்டிய தெல்கொடையைச் சேர்ந்த திரு. ஆர்.டீ.எஸ். குமார அவர்களுக்கும் மற்றும் லக்கின் அதிர்ஷ்டம் 2563 ஆம் வாரத்தின் சுப்பிரி ஜயமல்லத் தொகையான ரூபா. 2,000,000 வினை காங்கேசந்துரையைச் சேர்ந்த திரு.ஜீ. நிதுசன் அவர்களுக்குமான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் பத்து இலட்சம் கொண்ட பணப் பரிசில்களை வென்ற வெற்றியாளர்கள் நாற்பத்தாறு பேருக்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டதோடு, அத கோடிபதி விசேட சீட்டிலுப்பு வாரத்தின் ஊடாக விகோ மோட்டார் வாகனத்தை வென்ற வெற்றியாளர் மற்றும் மோட்டார்  சைக்கிள்களை வென்ற வெற்றியாளர்கள் மூவருக்குமான சாவிகள் வழங்கப்பட்டது.

இச் சந்தர்ப்பத்திற்காக அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் திரு. சேன சூரியப்பெரும அவர்கள், செயற்பாட்டுப் பணிப்பாளர் திரு. எச்.ஆர். விமலசிரி அவர்கள் உட்பட ஏனைய அலுவலர்களும்  கலந்துகொண்டார்கள்.சிறப்புச் செய்தி