அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

“ DLB யின் பராமரிப்பு” ஆறாவது வைத்திய முகாம் பதுள்ளையில்.

01-October-2019

அபிவிருத்தி  லொத்தர் சபையின்  “DLB யின் பராமரிப்பு” என்ற தொனிப் பொருளின் கீழ் விற்பனை முகவர்கள் மற்றும் விற்பனை உதவியாளர்களின் நலன்களை கருத்திற் கொண்டு நடாத்தப்படும் வைத்திய முகாம் தொடரின் மற்றொரு அங்கம் கடந்த  நாட்களில் இடம்பெற்றது.

பதுள்ளை மாவட்டத்தின் விற்பனை முகவர்கள் மற்றும் விற்பனை உதவியாளர்களுக்காக நடாத்தப்பட்ட இவ் வைத்திய முகாம், நடைபெறுகின்ற வைத்திய முகாம் தொடரின் ஆறாவதாகக் காணப்படுகின்றது.

கடந்த செப்டம்பர்  மாதம் 27 ஆந் திகதியன்று நடாத்தப்பட்ட இவ் வைத்திய முகாமிற்கு 500​ க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதோடு, அதன்போது  வைத்திய பரிோதனை மற்றும் வைத்திய ஆலோசனைகளுடன்  மருந்துகளும் வழங்கி வைக்கப்பட்டதோடு, அதில் கண் பரிசோதனைகளும் குறைபாடுடையவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளும் வழங்கி வைக்கும் நிகழ்வு அங்கு இடம்பெற்றது.

இவ் வைத்திய முகாமிற்கு கண்டி மாவட்டத்தின் விற்பனை முகவர்கள் மற்றும் விற்பனை உதவியாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டார்கள். அத்தோடு இவ்வாறான சமூகப் பணியினை  மேற்கொள்வது  தொடர்பாக அவர்களிடமிருந்து தொடர்ச்சியாக பாராட்டுக்களும் நன்றிகளும் அபிவிருத்தி  லொத்தர் சபைக்கு குவிந்த வண்ணமிருக்கின்றது.

இவ் வைத்திய முகாமிற்கு அபிவிருத்தி லொத்தர் சபைத் தலைவர் திரு. சேன சூரியப்பெரும அவர்கள், பொது முகாமையாளர் அநுர ஜயரத்ன அவர்கள், உதவிப் பொது முகாமையாளர் ( விற்பனை) சுனில் ஜயரத்ன அவர்கள், பதுள்ளை மாவட்ட வலய முகாமையாளர் உபாலி சமன்குமார அவர்கள் உள்ளடங்லான பணியாட்தொகுதியினர்கள் அந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்கள்.23-April-2021

...

02-April-2021

...

30-March-2021

...

சிறப்புக் கட்டுரைகள்