அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

நாட்டில் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிர்ஷ்டத்தால் நாட்டையே வென்றெடுத்த வாழ்க்கை

25-March-2019

அபிவிருத்தி லொத்தர் சபை என்பது புதிய  தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும்  பொக்கிஷமாகத் தொழிற்படுகின்றது.

அவிஸ்ஸாவெலயைச் சேர்ந்த என்.ஜீ. சிரிசேன மற்றும் மொனராகலையைச் சேர்ந்த பெனட் த சில்வா ஆகியோர் அவ்வகையில் தொழில் வாய்ப்பினைப் பெற்று தங்களது வாழ்க்கையில் வெற்றியீட்டிய இரு மாபெரும் மாவட்ட விநியோகஸ்த விற்பனை முகவர்களாவார்களாக திகழ்கின்றார்கள்.

கொழும்பு மாவட்டத்தின் விநியோகஸ்த விற்பனை முகவரான திரு. சிரிசேன அவர்கள் அபிவிருத்தி லொத்தர் சபையின் தொடக்கத்திலிருந்து விற்பனையில் இணைந்து கொண்டு இதுவரையில் பிரபலமிக்க விநியோகஸ்த விற்பனை முகவராவாராக விளங்குகின்றார்.

“ நான் அபிவிருத்தி லொத்தர் சபையுடன் 1983 ஆண்டு இணைந்து கொண்டேன். ஆரம்ப காலங்களில் நான் ஒரு நாளைக்கு மூன்று லொத்தர் பெட்டிகளைக்  கொள்வனவு செய்தேன். அந்த நாட்களில் இருந்த லொத்தர் சபைத் தலைவர் எனக்கு இன்னும் ஐந்து பெட்டிகளை கொள்வனவு செய்யுமாறு வலியுறுத்தினார். என்றாலும் எட்டு பெட்டிகளைக் கொள்வனவு செய்யுமளவிற்கு என்னிடம் அப்போது பணம் காணப்படவில்லை. எனினும் நம்பிக்கையின் அடிப்படையில் கடனுக்காக மேலும் ஐந்து பெட்டிகளை மேலதிகமாக தருவதற்கு அத் தலைவர் சம்மதித்து அதற்கான நடவடிக்கையும் எடுத்தார். எட்டு பெட்டிகள் என்பது பணத்தால் எனக்கு மிகப் பெரிய தொகையாக இருந்தது. அதன் காரணமாக நானும் நாளுக்கு நாள் முயற்சி செய்து முன்னேறுவதற்கான வழிகளை மேற்கொண்டேன். இன்று கொழும்பு மாவட்டத்தின் விநியோகஸ்த விற்பனை முகவராக நான் மாறியிருந்தாலும் ஆரம்ப காலங்களில் நான் வீடு வீடாக நடந்து சென்று லொத்தர் சீட்டுக்களை விற்றேன். ஆனால் நாளுக்கு நாள் எனது லொத்தர் சீட்டு விற்பனை அதிகரித்துச் செல்லும் போது என்னுள் ஆர்வமேட்பட்டது. அப்போது லொத்தர் சீட்டுக்களை விற்கும் போதே விநியோகிக்கும் நடவடிக்கையையும் மேற்கொள்வதற்கு என்னால் சிரமமாக இருந்தது. அதனால் நான் மேலும் விற்பனை முகவர்கள் சிலரை இணைத்துக் கொண்டேன். மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து படாதபாடுபட்டு நான் இந்நிலைக்கு இதனை முன்னேற்றி வந்துள்ளேன். லொத்தர் வியாபாரத்தினை விட என் வாழ்வில் நான் எந்தவொன்றுக்கும் அர்ப்பணிப்புக்கள் செய்யவில்லை. என்றாலும் நான் அதன் விளைவுகளை அடைந்து கொண்டுள்ளேன். நான் இன்றும் வாழ்வது நானாகவே கட்டியெழுப்பிய லொத்தர் வியாபாரத்தின் மூலமாகும்.”

அவர் ஐந்தாம் வகுப்பு வரை மாத்திரமே கற்றுள்ளார் என்றாலும் சம்பாதிக்கும் கலையை நன்கறிந்த வல்லுநராக திகழ்கின்றார். அபிவிருத்தி லொத்தர் சபையின் விற்பனையை அதிகரித்தவர் என்று குறிப்பிடும் சகல சந்தர்ப்பங்களின் போதும் அவரின் கண்கள் கண்ணீரால் ஈரமாயின. வெற்றிகரமான வர்த்தகராக அவர் திகழ்வதோடு குடும்ப வாழ்க்கையிலும் வெற்றியீட்டிய கணவராக, தந்தையாக தனது பிள்ளைகளுக்கும் பேரப் பிள்ளைகளுக்கும், தனக்குக் கீழால்  தொழில் புரியும் ஐம்பத்தாறு (56) பேரினைக் கொண்ட விற்பனை முகவர்களுக்கும் தனது கடமைகளை நிறைவேற்றி இன்றும் செயற்பாட்டிலுள்ள விநியோகஸ்த விற்பனை முகவராக எம்.ஜீ. சிரிசேன அவர்களின் வாழ்க்கை சகலருக்கும் முன்னுதாரணமாக விளங்குகின்றது.  

அவரைப் போன்றே மொனராகலை மாவட்டத்தின் விநியோகஸ்த விற்பனை முகவராக விளங்கும் பி.எச்.பெனட் த சில்வா அவர்களும் அபிவிருத்தி லொத்தர் சபையின் ஆரம்ப விற்பனை முகவர்களில் ஒருவராவார். அவரும் இன்று வெற்றிகரமான ஒரு வர்த்தகராக திகழ்கின்றார். அவரின் சிறப்புத்தன்மை யாதெனில் அவர் விநியோகம் செய்வது அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர் சீட்டுக்களை மாத்திரமேயாகும். அதற்குக் காரணம் மகபொல புலமைப் பரிசில் மற்றும் சனாதிபதி நிதியத்துக்கு நேரடியாக பங்களிப்புச் செய்யும் அபிவிருத்தி லொத்தர் சபைக்கு தனது உச்ச அளவு பணியின் மூலம் பங்களிப்புக்களை மேற்கொள்வதன் பொருட்டாகும்.

“ நான் கல்முனையில் பிறந்தேன். எங்களுக்கு கல்முனையைப் போன்றே பொத்துவில்லிலும் பாரிய வர்த்தக நிலையங்கள் இருந்தன. எனக்கு அப்போது இருபத்து ஐந்து வயதிருக்கும். அக் காலத்தில் நானும் அப்பாவுடன் வியாபாரத்தில் இணைந்திருந்தேன். ஆனாலும் யுத்த சூழ்நிலையின் காரணமாக அவ் அனைத்து வியாபாரங்களும் எம்மிடமிருந்து பறிபோய்விட்டது. அதனால் அனைத்தையும் இழந்து கொழும்புக்கு வெறுங்கையோடு வந்து சேர்ந்தோம். அவ்வாறு கொழும்புக்கு வந்தநேரத்தில் தான் நான் அபிவிருத்தி லொத்தர் சபையின் ஆரம்ப சந்தர்ப்பங்களிலே இணைந்து கொண்டேன். முதலில் நான் கொள்ளுபிடிய பிரதேசத்தின் விற்பனை முகவராக இணைந்து கொண்டேன்.  அதற்கிடையில் தான் எனக்கு மொனராகலையில் விநியோகஸ்த விற்பனை முகவராக கடமையாற்றும் படி அபிவிருத்தி லொத்தர் சபையினால் அழைப்பு விடுக்கப்பட்டது. மொனராகலை போன்ற மிகச் கஷ்டமான பிரதேசத்துக்குச்  செல்ல அநேகமானோர் விரும்பவில்லை. என்றாலும் நான் அச் சவாலினை ஏற்று மொனராகலைக்குச் சென்று மாவட்ட விநியோகஸ்த விற்பனை முகவராக வேலை பார்க்க ஆரம்பித்தேன். அன்று அபிவிருத்தி லொத்தர் சபை எனக்கு கைகொடுத்து நின்றது. இன்றும் சபையினால் எமக்கு பாரிய சக்தியினை வழங்கி வருகின்றது. எனக்குக் கீழ் விற்பனை  முகவர்கள் நாற்பத்தைந்து (45) பேர் இருக்கின்றார்கள். எந்தளவு கஷ்டமான பிதேசமாக இருந்தாலும் அபிவிருத்தி லொத்தர் சபையின் விற்பனை வழிகாட்டலின் மூலம் நாம் முன்னனியில் திகழ்கின்றேன். ஒரு நாளையில் சகல லொத்தர் சீட்டு வகைகளிலும் ஆறாயிரம் அளவு விற்பனை செய்யும் நிலைக்கு நாம் வந்துள்ளோம். வியாபாரத்தினைப் போன்றே எமது வாழ்க்கையும் வெற்றிகரமாக  மாறியுள்ளது.”

இந் நாட்டில் நிலவிய உள்நாட்டுப் போரினால் மிகவும் பாதிப்புக்களை எதிர்கொண்ட பெனட் அவர்கள் அவையனைத்தையும் தாண்டி வெற்றிப் பாதையில் பயணிப்பதற்கு முற்பட்டமை பாராட்டத்தக்கதாகும். போர் மேகத்தினுள் புதையுண்டு அவற்றின் நிழலில் தனது எதிர்காலத்தினை இழக்காதிருக்க தைரியத்தை வழங்கிய அபிவிருத்தி லொத்தர் சபையுடன் அவர் மீளவும் உயிர்தெழும்புகின்றார்.    

வாழ்க்கையில் எந்தவித நோக்கங்களும் இன்றிய காலப்பகுதியில்  லொத்தர் சீட்டு விற்பனையினால் தனது வாழ்க்கையை கட்டியெழுப்பிய இவர்கள் இருவரும் அபிவிருத்தி லொத்தர் சபைக்கு வழங்கிய ஒத்துழைப்பு சார்ந்த சக்திக்கு இன்றும் நாளையும் இதற்குப் பிறகும் அபிவிருத்தி லொத்தர் சபையின் தொடர்ச்சியான அன்புக்குப் பாத்திரமானவர்கள் என்பதனை நாம் ஞாபகப்படுத்துவது இதயங்கனிந்த வகையிலாகும்.


லொத்தர் சீட்டிலுப்பு நாட்களின் திருத்தங்களுடன் நியத ஜய லொத்தர் சீட்டு சந்தையிலிருந்தும் அகற்றப்பட்டது.

02-August-2019

லொத்தர் சீட்டிலுப்பு நாட்களின் திருத்தங்களுடன் நியத ஜய லொத்தர் சீட்டு சந்தையிலிருந்தும் அகற்றப்பட்டது.

வாரந்தம் சகல செவ்வாய் மற்றும்  வெள்ளிக் கிழமைகளில் சீட்டிலுக்கப்படும் நியத ஜய லொத்தர் சீட்டு 2019 ஜூலை மாதம் 30 ஆந் திகதியிலிருந்து வலுவிலிருக்கும் வகையில் சந்தையிலிருந்து அகற்றுவதற்கு அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் இறுதி வெற்றிக்கான சீட்டிலுப்பு 2019 ஜூலை மாதம் 30 ஆ...

சிறப்புக் கட்டுரைகள்